×

ரபேல் விமானம் கொள்முதல் உறுதிபடுத்தப்படவில்லை: பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சூசக தகவல்

புதுடெல்லி: பிரான்சிடம் இருந்து ரபேல் விமானங்கள், ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல்கள் வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி அங்கு பாஸ்டில் தின விழாவில் பங்கேற்றார். பின்னர் வரும் வழியில் ஐக்கிய அரபு அமீரகம் சென்று விட்டு இந்தியா திரும்பினார். முன்னதாக, பிரான்சிடம் இருந்து 26 ரபேல்-எம் போர் விமானங்கள், 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு தளவாட கையகப்படுத்துதல் கவுன்சில் அனுமதி அளித்தது. இந்நிலையில், போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்கள் வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து கூறுகையில், ‘’இந்தியாவின் கப்பல் கட்டுமான நிறுவனம் மசகான் டாக் லிமிடெட் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் இணைந்து ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க கடந்த 6ம் தேதி ஒப்பந்தம் செய்து கொண்டன. ஆனால் இது தொடர்பான தொழில்நுட்பம்-வர்த்தக பேச்சுவார்த்தை இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. அதே போல் ரபேல்-எம் போர் விமானங்களை வாங்குவது குறித்த பேச்சுவார்தையும் உறுதிபடுத்தபடவில்லை. இரு தரப்பிலும் இது தொடர்பான தொழில்நுட்பம்-வர்த்தக பேச்சுவார்த்தை முடிந்த பின்னரே, ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்,’’ என்று கூறினர்.

The post ரபேல் விமானம் கொள்முதல் உறுதிபடுத்தப்படவில்லை: பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சூசக தகவல் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,France ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...